பெங்களூர் அணி பிளே ஆஃப் செல்ல என்ன செய்ய வேண்டும்?

கடைசிக் கட்டத்தில் பல அதிசயங்கள் ஐபிஎல்-லில் நிகழ்ந்துள்ளன. இந்தமுறை அந்த அதிசயத்தை பெங்களூர் அணி நிகழ்த்துமா?
பெங்களூர் அணி பிளே ஆஃப் செல்ல என்ன செய்ய வேண்டும்?
Updated on
1 min read

பெங்களூர் அணி இந்த வருட ஐபிஎலில்-லில் இதுவரை விளையாடிய 9 ஆட்டங்களில் 5 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. அந்த அணி பிளே ஆஃப்-புக்குத் தகுதி பெற வாய்ப்புண்டா?

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 31-ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் லயன்ஸ் அணி. பெங்களூரில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பெங்களூர் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய குஜராத், 13.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து வென்றது. இந்தத் தோல்வி பெங்களூர் அணிக்குக் கடுமையான நெருக்கடியைத் தந்துள்ளது.

இந்த ஐபிஎல் போட்டியில் மும்பை, கொல்கத்தா ஆகிய இரு அணிகளும் நிச்சயம் பிளே ஆப்-புக்குத் தகுதி பெற்றுவிடும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஹைதராபாத் அணி மூன்றாவது சிறந்த அணியாக உள்ளது. எனவே அந்த அணியும் அடுத்தச் சுற்றுக்குச் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. 

எனவே இந்த இடத்தில் பெங்களூர் அணி அதன் கடைசி 5 ஆட்டங்களையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அப்போது 15 புள்ளிகள் அதன் வசம் இருக்கும். ஐபிஎல்-லில் 14 புள்ளிகளுடன் சில அணிகள் அடுத்தச் சுற்றுக்குச் சென்றுள்ளன. எனவே இதி வாய்ப்பு உருவாகலாம்.

ஆனால் இந்த 5 ஆட்டங்களில் ஒன்றில் தோற்றாலும் நிலைமை மிக மோசமாகிவிடும். 13 புள்ளிகளுடன் அடுத்தச் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லை என்றே கூறலாம். அதற்கு மற்ற அணிகளுடன் அதற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் நிறைய ஆட்டங்களில் தோற்று பெங்களூருக்கு வழிவிடவேண்டும். அதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவு. எனவே இன்னும் ஒரு தோல்வி போதும். பெங்களூர் அணி மூட்டை கட்ட.

கடைசிக் கட்டத்தில் பல அதிசயங்கள் ஐபிஎல்-லில் நிகழ்ந்துள்ளன. இந்தமுறை அந்த அதிசயத்தை பெங்களூர் அணி நிகழ்த்துமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com