ஈரான் மீதான தாக்குதல் மேலும் 5 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ஜஜாரியா பரிந்துரை!

ஒரு கையை இழந்தாலும், நம்பிக்கையை இழக்காத ஜஜாரியா ஈட்டி எறிதலில் அசத்தினார். 2004-இல் அர்ஜுனா விருதைப் பெற்றார்...

News image
Updated On :3 ஆகஸ்ட் 2017, 9:44 am

எழில்

பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இருமுறை தங்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியா, ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். 

விளையாட்டுத்துறையில் நாட்டுக்கு நற்பெயரை ஈட்டித்தரும் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்றுநர்கள், விளையாட்டு தொடர்புடையவர்கள் ஆகியோருக்கு பல்வேறு விருதுகளை ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கி வருகிறது. நிகழாண்டுக்கான அர்ஜூனா விருது, ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது, தயான்சந்த் விருது, துரோணாசார்யா விருது, ராஷ்ய கேல் புரோட்ஸஹான் விருது ஆகிய விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ரியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் தங்கம் வென்றார் தேவேந்திர ஜஜாரியா. தங்கம் வென்றதோடு, தனது பழைய உலக சாதனையையும் முறியடித்தார். முன்னதாக 2004-இல் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தேவேந்திர ஜஜாரியா தங்கம் வென்றபோது 62.15 மீ. தூரம் ஈட்டி எறிந்ததே உலக சாதனையாக இருந்தது. ரியோவில் ஜஜாரியா 63.97 மீ. தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்தார். 

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவரான ஜஜாரியா 8 வயது சிறுவனாக இருந்தபோது மரத்தில் ஏறியுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் அவர் தனது இடது கையை இழந்தார். ஒரு கையை இழந்தாலும், நம்பிக்கையை இழக்காத ஜஜாரியா ஈட்டி எறிதலில் அசத்தினார். 2004-இல் அர்ஜுனா விருதைப் பெற்றார். அதன்பிறகு 2012-இல் பத்மஸ்ரீ விருதைப் பெற்றார். அதன்மூலம் பத்மஸ்ரீ விருதைப் பெற்ற முதல் பாரா ஒலிம்பிக் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 

இந்நிலையில் ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ஜஜாரியா பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அதேபோல ஹாக்கி வீரர் சர்தார் சிங்கும் இந்த விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.