மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

துணை கேப்டன் பதவி: எனக்கு கிடைத்த கெளரவம்

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:40 pm

DIN

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா-இலங்கை இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வரும் 20-ஆம் தேதி தொடங்குகிறது. அதில் பங்கேற்கும் இந்திய அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
அதனால் மகிழ்ச்சியடைந்துள்ள அவர் மேலும் கூறியதாவது: 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தேன். இப்போது துணை கேப்டனாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக இருந்தாலும், சர்வதேசப் போட்டியில் இந்திய அணிக்கு துணை கேப்டனாக இருப்பது முற்றிலும் வித்தியாசமானதாகும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.