உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணி கடைசியாக ஜெயித்தது எப்போது?

இந்தியா-இலங்கை இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:11 pm IST

இந்தியா-இலங்கை இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது.  

இந்தியா - இலங்கை அணிகள் இதுவரை 150 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா 83 முறையும் இலங்கை 55 முறையும் ஜெயித்துள்ளன.

இந்திய அணி இலங்கையில் இருநாடுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர்களில் 7 முறை பங்கேற்று இருமுறை மட்டுமே தோல்விபெற்றுள்ளது. இலங்கை அணி சிறப்பாக விளையாடிய 1993, 1997 காலக்கட்டங்களில் இரு ஒருநாள் தொடர்களில் இந்தியா தோல்வியைச் சந்தித்துள்ளது. 1985, 2006-ல் நடைபெற்ற இரு தொடர்கள் சமன் ஆகியுள்ளன. இலங்கையில் இந்திய அணி கடைசியாகப் பங்கேற்ற 4 ஒருநாள் தொடர்களிலும் தோல்வியைச் சந்தித்ததில்லை.

இந்தியாவில் இலங்கை அணி 9 முறை ஒருநாள் தொடர்களில் விளையாடி 8 தொடர்களில் தோல்வி கண்டுள்ளது. 1997 தொடர் மட்டும் 1 - 1 என சமன் ஆகியுள்ளது. 

இதைவைத்துப் பார்க்கும்போது 1997-க்குப் பிறகு இலங்கை அணி இந்தியாவை ஒருநாள் தொடரில் வெற்றி கண்டதில்லை. இதற்கு நடுவில் பல வீரர்கள் இலங்கை அணிக்காக விளையாடி ஓய்வும் பெற்றுவிட்டார்கள். 448 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முன்னாள் வீரர் மஹேலா ஜெயவர்தனே, ஒருமுறை கூட இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதில்லை.

வரலாற்றை மாற்றி எழுதுமா தற்போதைய இலங்கை அணி? 

இந்தியா - இலங்கை ஒருநாள் தொடர்கள்

இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் தொடர்கள்

1985: 1 - 1 (3)
1993: இலங்கை 2 - 1 (3)
1997: இலங்கை 3 - 0 (3)
2006: 0-0 (3)
2008: இந்தியா 3 - 2 (5)
2009: இந்தியா 4 - 1 (5)
2012: இந்தியா 4 - 1 (5)

இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடர்கள்

1982: இந்தியா 3 - 0 (3)
1986-87: இந்தியா 4 - 1 (5)
1990: இந்தியா 2 - 1 (3)
1994: இந்தியா 2 - 1 (3)
1997: 1 - 1 (3)
2005: இந்தியா 6 - 1 (7)
2007: இந்தியா 2 - 1 (4)
2009: இந்தியா 3 - 1 (5)
2014: இந்தியா 5 - 0 (5)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.