மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பல்லகெலேவில் நாளை 2-ஆவது ஒருநாள்: வெற்றிபெறுமா இலங்கை?

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-ஆவது ஒருநாள் போட்டி பல்லகெலேவில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:43 pm

DIN

இலங்கை சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி அங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டித் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. 

முதலாவதாக நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 என இந்தியா தொடரை கைப்பற்றி அபார சாதனை படைத்தது. மேலும், அந்நிய மண்ணில் இந்திய அணி பெற்ற முதல் வயிட்-வாஷ் வெற்றி இதுவாகும்.

இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா, இலங்கை அணிகள் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி தம்புல்லாவில் பகலிரவு ஆட்டமாக ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்தப் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது. 

இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், 2-ஆவது ஒருநாள் போட்டி பல்லகெலேவில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதுவரையில் தோல்வியை மட்டுமே சந்தித்து வரும் இலங்கை அணி இதில் வெற்றிபெற கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. 

இலங்கையின் மோசமான ஆட்டம் தொடர்பாக அந்நாட்டு முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தங்கள் மீதான விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இலங்கை அணி கடுமையாக சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விரு அணிகளும் கடைசியாக மோதிய 19 ஆட்டங்களில் இந்தியா 15-ல் வென்றுள்ளது. 

இந்திய அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, ஷிகர் தவன், லோகேஷ் ராகுல், கேதார் ஜாதவ், ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா, யசுவேந்திர சாஹல், மணீஷ் பாண்டே, அஜிங்கிய ரஹானே, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.