ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

இங்கிலாந்து வெற்றி பெறுமா?: பரபரப்பான 5-வது நாளை நோக்கி ஆஷஸ் டெஸ்ட்!

4-வது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது...

News image
Updated On :5 டிசம்பர் 2017, 12:26 pm

எழில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி வெல்ல 354 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் அந்த அணி 4-வது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

அடிலெய்டில் சனிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 149 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 442 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷான் மார்ஷ் 126 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் நாதன் லயன் 10 ரன்களுடன் களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஓவர்டன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

முதல் இன்னிங்ஸில் 215 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா தனது 2-வது இன்னிங்ஸில் 138 ரன்களுக்குச் சுருண்டுள்ளது. அந்த அணியில் ஒருவர் கூட 20 ரன்னைத் தாண்டி எடுக்கவில்லை. அதிகபட்சமாக கவாஜா, ஸ்டார்க் தலா 20 ரன்கள் எடுத்தார்கள். மற்ற அனைத்து வீரர்களையும் சொற்ப ரன்களில் வீழ்த்தினார்கள் ஆண்டர்சனும் வோக்ஸும். ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளும் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள். இதனால் இந்த டெஸ்ட் போட்டியில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டியை வெல்ல இங்கிலாந்து அணிக்கு 354 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் 4-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 62 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் ரூட் 67 ரன்களுடனும் வோக்ஸ் 5 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். தொடக்க வீரர் ஸ்டோன்மேன் 36 ரன்கள் எடுத்து ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 6 விக்கெட் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 178 ரன்கள் தேவைப்படுகிறது. இதனால் ஆட்டத்தின் கடைசி நாளான நாளை மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.