டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

போல்ட் 7 விக்கெட்டுகள்! 121 ரன்களுக்குச் சுருண்டு ஒருநாள் தொடரை இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி!

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:25 pm

எழில்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியை நியூஸிலாந்து அணி 204 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. 

கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

முதல் ஒருநாள் போட்டியை வென்ற நியூஸிலாந்து அணி மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது. வொர்க்கர் (58 ரன்கள்)), டெய்லர் (57 ரன்கள்), நிகோலஸ் (83 ரன்கள்) ஆகியோர் அரை சதமெடுத்தார்கள். நிகோலஸ் 62 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆஸ்ட்லே 49 ரன்கள் எடுத்து கடைசிக்கட்டத்தில் அணிக்கு மிகவும் உதவினார். மே.இ. அணி தரப்பில் காட்ரெல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

கடினமான இலக்கை எதிர்கொள்ளமுடியாமல் மே.இ. அணி 28 ஓவர்களில் 121 ரன்களுக்குச் சுருண்டது. அந்த அணியில் நர்ஸ் அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்தார். நியூஸிலாந்தின் போல்ட் அசத்தலாகப் பந்துவீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச்சென்றார். 

இதையடுத்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை வென்றுள்ள நியூஸிலாந்து, 2-0 என முன்னிலை வகிக்கிறது. டிசம்பர் 26 அன்று, இதே மைதானத்தில் கடைசி ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.