விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சிறந்த நாள்: பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் இங்கிலாந்து அசத்தல்!

அற்புதமான பந்துவீச்சு, பொறுப்பான பேட்டிங், குக்கின் சதம் என இந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தின் சிறந்த நாளாக இன்று அமைந்துள்ளது...

News image
Updated On :27 டிசம்பர் 2017, 7:09 am

எழில்

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-வது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலியா அணி 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து 2-ம் நாளின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

மெல்போர்னில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் 89 ஓவர்களில் 244 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா.. ஆஸ்திரேலியா அணியின் துணைக் கேப்டன் டேவிட் வார்னர், டெஸ்ட் போட்டியில் தனது 21-ஆவது சதத்தைப் பதிவு செய்தார். ஸ்மித் 131 பந்துகளில் 65 ரன்களுடனும், மார்ஷ் 93 பந்துகளில் 31 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

இந்நிலையில் இந்தப் போட்டியிலும் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஸ்மித், டாம் கியுரன் பந்துவீச்சில் 76 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் - 260. அதன்பிறகு தகுந்த இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியது இங்கிலாந்து அணி. மார்ஷ் 61 ரன்களில் பிராட் பந்துவீச்சில் வீழ்ந்தார். பின்வரிசை வீரர்களில் டிம் பெய்ன் தவிர (24 ரன்கள்) அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இதனால் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 119 ஓவர்களில் 327 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்துத் தரப்பில் பிராட் 4 விக்கெட்டுகளும் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். ஆஸ்திரேலிய அணி கடைசி 7 விக்கெட்டுகளை 67 ரன்களுக்கு இழந்தது இந்த டெஸ்ட் போட்டியின் முக்கியத் திருப்புமுனை. 

Story image

இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, 57 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. அலாஸ்டர் குக் 104, ஜோ ரூட் 49 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இன்றைய நாளின் கடைசி ஓவரில் 164 பந்துகளில் குக் சதம் அடித்தார். இது அவருடைய 32-வது சதம்.

அற்புதமான பந்துவீச்சு, பொறுப்பான பேட்டிங், குக்கின் சதம் என இந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தின் சிறந்த நாளாக இன்று அமைந்துள்ளது. இதனால் இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் வெற்றி எதிர்பார்க்கப்படுகிறது. 

மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3 வெற்றிகளை பதிவு செய்து ஏற்கெனவே தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றிவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.