இந்திய 'ஏ' அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: வங்கதேசம் 224 ரன்களில் டிக்ளேர்! 

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற இந்திய 'ஏ'  எதிரான பயிற்சி ஆட்டத்தின் முதல்நாளில் 224 ரன்கள் எடுத்து 'டிக்ளேர்' செய்தது.
இந்திய 'ஏ' அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: வங்கதேசம் 224 ரன்களில் டிக்ளேர்! 

ஹைதராபாத்: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற இந்திய 'ஏ'  எதிரான பயிற்சி ஆட்டத்தின் முதல்நாளில் 224 ரன்கள் எடுத்து 'டிக்ளேர்' செய்தது.

இந்தியா - வங்கதேச அணிகளுக்கிடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 9-ந்தேதி தொடங்க உள்ளது. இதற்க்கு முன்னதாக வங்காள தேசம் - இந்திய ஏ அணிகளுக்கிடையிலான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி போட்டி ஹைதராபாத்தில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தமீம் இக்பால், இம்ருல் கெய்ஸ் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இக்பால் 13 ரன்னிலும், இம்ருல் கெய்ஸ் 4 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின்னர் ஆட வந்த வந்த சவுமியா சர்க்கார் 52 ரன்களும், கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் 58 ரன்கள் எடுத்தனர். 8 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்திருக்கும்போது வங்கதேச அணி தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

அதன் பின்னர் இந்திய 'ஏ' அணி தனது பேட்டிங்கை தொடங்கியது, தொடக்க வீரர்களாக பன்சால், அபிநவ் முகுந்த் ஆகியோ் களம் இறங்கினார்கள். அபிநவ் முகுந்த் 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு பன்சால் உடன் ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்து விளையாடினார். முதல் நாள் ஆட்ட முடிவில்  இந்தியா ஏ அணி 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்துள்ளது. பன்சால் 40 ரன்னுடனும், ஸ்ரேயாஸ் அய்யர் 21 ரன்னுடனும் காலத்தில் உள்ளனர்.

இரண்டாவதுமற்றும் மற்றும் இறுதிநாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com