ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஹைதராபாத் டெஸ்ட்: உணவு இடைவேளையில் இந்தியா 477/4

வங்கதேசத்திற்கு எதிரான ஹைதராபாத் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று உணவு இடைவேளையின் பொழுது இந்தியா 4 விக்கட்டுகளை இழந்து 477 ரன்களை எடுத்துள்ளது.

News image
Updated On :10 பிப்ரவரி 2017, 7:34 am

DIN

ஹைதராபாத்: வங்கதேசத்திற்கு எதிரான ஹைதராபாத் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று உணவு இடைவேளையின் பொழுது இந்தியா 4 விக்கட்டுகளை இழந்து 477 ரன்களை எடுத்துள்ளது.

மூன்று விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் என்ற நேற்றைய ஸ்கோருடன் இந்தியா தனது இரண்டாம் நாள் ஆட்டத்தை துவக்கியது. சிறப்பாக விளையாடி வந்த ரஹானே  73 பந்துகளில் அரைசதம் அடித்தார். 98.1 ஓவர்களில் இந்தியா 400 ரன்களைக் கடந்தது. 82 ரன்களை எடுத்திருந்த நிலையில் ரஹானே தைஜுல் இஸ்லாம் பந்துவீச்சில் மேஹதி ஹாஸனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் கோலியுடன் விரிதிமான் சஹா இணைந்தார்.

உணவு இடைவேளையின் பொழுது இந்தியா நான்கு விக்கெட் இழப்பிற்கு 477 ரன்கள் எடுத்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.