வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
459 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி, 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. இன்று ஆட்டத்தின் முதல் பகுதியில் அந்த அணி இரு விக்கெட்டுகளை இழந்தது. ஷகிப் அல்ஹசன் விக்கெட்டை ஜடேஜாவும் முஷ்பிகுர் ரஹிம் விக்கெட்டை அஸ்வினும் வீழ்த்தினார்கள். 5-ம் நாள் உணவு இடைவேளையின்போது வங்கதேச அணி 67 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது.
இவ்விரு அணிகள் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாதில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் பேட் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 166 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 687 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் கேப்டன் கோலி 204, முரளி விஜய் 108, ரித்திமான் சாஹா ஆட்டமிழக்காமல் 106 ரன்கள் குவித்தனர். வங்கதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும், மெஹதி ஹசன் மிராஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி 127.5 ஓவர்களில் 388 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முஷ்பிகுர் ரஹிம், 235 பந்துகளில் சதமடித்தார். இது டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 5-ஆவது சதமாகும். கடைசி விக்கெட்டாக முஷ்பிகுர் ரஹிம் ஆட்டமிழந்தார். அவர் 262 பந்துகளில் 2 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 127 ரன்கள் குவித்தார். இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 299 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, வங்கதேசத்துக்கு "பாலோ-ஆன்' கொடுக்காமல் 2-ஆவது இன்னிங்ஸை ஆடியது. இந்தியா 29 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தார் கேப்டன் கோலி. இதையடுத்து 459 ரன்கள் வெற்றி இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணி, 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. மகமதுல்லா 9, ஷகிப் அல்ஹசன் 21 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
வங்கதேச அணி வெற்றி இலக்கை எட்டுவதற்கு கடைசி நாளில் 257 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் கைவசம் 5 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறிவிட்டதால் இந்திய அணி ஜெயிப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி

ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு தற்கொலைத் தாக்குதல் மிரட்டல்

நந்தா கலை, அறிவியல் கல்லூரிக்கு மத்திய அரசு ரூ.70 லட்சம் ஊக்க நிதி

கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு ரூ.5.7 கோடி கல்வி ஊக்கத்தொகை
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


