மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர்: பரத் அருண்!

இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக பரத் அருணும் உதவிப் பயிற்சியாளராக சஞ்சய் பங்கரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்...

News image
Updated On :18 ஜூலை 2017, 10:42 am

இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக பரத் அருணும் உதவிப் பயிற்சியாளராக சஞ்சய் பங்கரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக, அணியின் முன்னாள் இயக்குநரான ரவி சாஸ்திரி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அதேவேளையில், அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ராகுல் டிராவிடையும் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஜாகிர் கானையும் நியமனம் செய்தது கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி. இதுகுறித்து, பிசிசிஐ தலைவர் (பொறுப்பு) சி.கே.கன்னா வெளியிட்ட அறிக்கையில், 'கிரிக்கெட் ஆலோசனைக் குழு பரிந்துரையின்படி, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியையும், பந்துவீச்சுப் பயிற்சியாளராக ஜாகிர் கானையும் நியமிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அடுத்த 2 ஆண்டுகளுக்கு அந்தப் பதவியில் இருப்பார்கள்' என்று தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் பந்துவீச்சுப் பயிற்சியாளராக பரத் அருண் நியமிக்கப்பட வேண்டும் என்பது ரவி சாஸ்திரியின் விருப்பமாக இருந்தது. இதையடுத்து பிசிசிஐ இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக பரத் அருணும் உதவிப் பயிற்சியாளராக சஞ்சய் பங்கரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இருவரும் 2019 உலகக் கோப்பை வரை பயிற்சியாளர்களாகச் செயல்படுவார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ஃபீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.