அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!
/

பொல்லாத ஆசைகள்... 29 படத்தின் புதிய பாடல் வெளியானது!

ரத்னகுமார் இயக்கிய 29 திரைப்படத்தின் புதிய பாடல் இன்று வெளியாகியுள்ளது.

News image

29 படத்தின் போஸ்டர்

Updated On :27 ஏப்ரல் 2026, 6:31 pm IST

ரத்னகுமார் இயக்கிய 29 திரைப்படத்தின் புதிய பாடல் இன்று வெளியாகியுள்ளது.

மேயாத மான் படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ரத்னகுமார் இயக்கிய புதிய திரைப்படம் ’29’.

இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நாயகனாக விது, நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் நடித்துள்ளனர்.

நடிகர் விது ஜிகர்தண்டா - 2, ரெட்ரோ திரைப்படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர்.

இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இவர் இசையில் சீலே சீலே, மேன்சன் குத்து, பூ பாடல் ஆகியவை முன்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், 29-ன் நான்காவது பாடலான பொல்லாத ஆசைகள் பாடல் இன்று (ஏப். 27) வெளியாகியுள்ளது.

உமா தேவி எழுதிய இப்பாடலை சத்யபிரகாஷ், சைந்தவி ஆகியோர் பாடியுள்ளனர்.

இப்படம் மே 8 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Summary

'Pollatha Aasaigal'... New Song from the 29th Film Released!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.