ரத்னகுமார் இயக்கிய 29 திரைப்படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.
மேயாத மான் படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. இதற்கு 29 எனப் பெயரிட்டுள்ளனர்.
இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டுத் தயாரிப்பில் உருவான இதில் நாயகனாக விது நடிக்க, நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார்கள். நடிகர் விது ஜிகர்தண்டா - 2, ரெட்ரோ திரைப்படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர்.
இப்படம் கோடை வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது. இதன் பாடல்கள் வெளியாகி கவனம் ஈர்த்திருந்த நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடலான பூ பாடல் வெளியாகியுள்ளது.
சான் ரோல்டன் இசையமைப்பில் ரத்னகுமார் எழுதிய இப்பாடலை ரவி ஜி பாடியுள்ளார். கடற்கரையில் காதலர்கள் பூ வாங்கும் காட்சியுடன் நல்ல வரிகளால் இப்பாடல் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது.
Summary
A new song from the film 29 directed by Rathna Kumar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
29 டிரைலர்!

பொல்லாத ஆசைகள்... 29 படத்தின் புதிய பாடல் வெளியானது!
பொல்லாத ஆசைகள்... 29 புதிய பாடல்!
29 வெளியீட்டுத் தேதி!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



