இங்கிலாந்து அணிக்கு 300 ரன்களுக்கு மேல் எடுப்பது மிக எளிதான காரியம் என்பது இன்னொருமுறை நிரூபணம் ஆகியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இங்கிலாந்து. இதன்மூலம் அந்த அணி சாம்பியன்ஸ் டிராபியை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது.
லண்டனில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த வங்கதேசம் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் குவித்தது. தமிம் இக்பால் 124 பந்துகளில் சதமடித்தார். 142 பந்துகளில் 3 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 128 ரன்கள் குவித்தார். ஒரு நாள் போட்டியில் அவர் அடித்த 9-ஆவது சதம் இது.
இங்கிலாந்துக்கு எதிராக வங்கதேசம் 300 ரன்கள் குவிப்பது இதுவே முதல்முறையாகும். இங்கிலாந்து தரப்பில் லியாம் பிளங்கெட் 10 ஓவர்களில் 59 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதையடுத்து வங்கதேச அணியின் வெற்றியைப் பலரும் எதிர்பார்த்தார்கள். 300 ரன்கள் எடுத்தபிறகு வங்கதேச அணி தோற்கக்கூடாது என்றும் இங்கிலாந்து தோற்றால் சாம்பியன்ஸ் டிராபி போட்டி இன்னும் பரபரப்பாக இருக்கும் என்றும் ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள்.
ஆனால் சமீபகாலமாக 300 ரன்களை அசால்ட்டாக எடுக்கும் இங்கிலாந்து அணி நேற்றும் பேட்டிங்கில் அசத்தியது. இங்கிலாந்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஜோ ரூட் 133 ரன்கள் குவித்தார். இது அவருடைய 10-ஆவது சதமாகும். அலெக்ஸ் ஹேல்ஸ் சதமடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சிக்ஸர் அடிக்க முயன்று அவுட் ஆனார். இது இங்கிலாந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. அவர் 86 பந்துகளில் 2 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் குவித்தார்.
47.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்து வெற்றி கண்டது இங்கிலாந்து. ஜோ ரூட் 129 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 133, மோர்கன் 61 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேசம் தரப்பில் மோர்ட்டஸா, சபீர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஜோ ரூட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வென்ற உற்சாகத்தில் இப்போட்டியில் களமிறங்கும் இங்கிலாந்து அணி, சாம்பியன்ஸ் டிராபி போட்டியை வெல்லும் என்பது கிரிக்கெட் நிபுணர்களின் கணிப்பு. அதை இங்கிலாந்து உறுதி செய்யும் என்றே தோன்றுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்

மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மயங்கி விழுந்து பலி

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

வெள்ளிச்சுடரே பாடல்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


