ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மகளிர் உலகக் கோப்பை: தொடக்க வீராங்கனைகள் அபார பேட்டிங்!

இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய தொடக்க வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி...

News image
Updated On :24 ஜூன் 2017, 12:22 pm

எழில்

இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய தொடக்க வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்துள்ளார்கள். 

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளில் டெர்பியில் தொடங்கியுள்ள ஆட்டத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் விளையாடி வருகின்றன. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய தொடக்க வீராங்கனை மந்தனா சிறப்பாக விளையாடி 45 பந்துகளில் அரை சதம் எடுத்தார். இந்திய ஆண்கள் அணிக்குத் தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்க ஏற்படுத்தித் தருவதுபோல இந்திய வீராங்கனைகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 

மந்தனா 72 பந்துகளில் 2 சிக்ஸர் 11 பவுண்டரிகளுடன் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு மந்தனா - பூனம் ரெளத் ஜோடி 144 ரன்கள் குவித்தது. இதன் பின்னர் பூனம் ரெளத் - மிதாலி ராஜ் ஜோடியும் சிறப்பாக விளையாடியது. பூனம் 134 பந்துகளில் 86 ரன்கள் குவித்து ஹஸல் பந்துவீச்சில் வெளியேறினார். அப்போது இந்திய அணி 43 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. இரு தொடக்க வீராங்கனைகளும் சிறப்பாக விளையாடினாலும் இருவராலும் சதத்தை எடுக்கமுடியாமல் போனது. இதன் பின்னர் கேப்டன் மிதாலி 56 பந்துகளில் அரை சதம் எடுத்தார். 

இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஓர் ஆட்டத்தில் மோதும். குரூப் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.