மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஐசிசி தலைவர் பதவியிலிருந்து சஷாங் மனோஹர் ராஜிநாமா!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் பதவியில் இருந்து இந்தியாவின் சஷாங் மனோகர் 'திடீர்' ராஜினாமா செய்துள்ளார்.

News image
Updated On :15 மார்ச் 2017, 7:28 am

லண்டன்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் பதவியில் இருந்து இந்தியாவின் சஷாங் மனோகர் 'திடீர்' ராஜினாமா செய்துள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த சஷாங் மனோகர் கடந்த நவமபர் 2015 முதல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். அவர் அதற்கு முன்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு   வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளராக பதவி வகித்து வந்தார். ஐசிசி தலைவர் பதவி ஏற்கும் முன்பாக தான் வகித்து வந்த பிசிசிஐ செயலாளர் பதவியை அவர் ராஜிநாமா செய்து விட்டார்.

இவர் தலைவராக இருந்த கால கட்டத்தில்தான் ஐசிசி வருவாயில் இருந்து  இந்தியாவுக்கு கிடைக்கும் வருடாந்திர வருமானத்தில் குறைப்பு உள்ளிட்ட சர்ச்சைக்குரிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில் சஷாங் மனோகர் இன்று தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்திருப்பதாக அறிவிப்பு வெளியானது.சொந்த காரணங்களுக்காக அவர் ராஜிநாமா செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.