தர்மசாலா டெஸ்டில் இந்திய அணி ஜெயிக்குமா, ஜெயிக்காதா என்று இந்திய ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்கள்.
அவர்களுக்கு ஒரு நற்செய்தி.
இந்த டெஸ்ட் போட்டியில் ஜடேஜா அசத்தலாக அரை சதம் எடுத்துள்ளார். இதுவே ஒருவேளை வெற்றியையும் தேடித்தரலாம்.
ஹிமாசலப் பிரதேச தலைநகர் தர்மசாலாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 88.3 ஓவர்களில் 300 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 111, மேத்யூ வேட் 57, டேவிட் வார்னர் 56 ரன்கள் சேர்த்தனர். இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் .
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 118.1 ஓவர்களில் 332 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அட்டகாசமாக விளையாடிய ஜடேஜா 95 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்தார். அவருடைய இந்த அரை சதம் டெஸ்ட் போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
டெஸ்ட் போட்டியில் இதுவரை 7 அரை சதங்கள் எடுத்துள்ளார் ஜடேஜா. அதில் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றும் மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளை டிரா செய்தும் உள்ளது. அதாவது ஜடேஜா தனது பேட்டிங் பங்களிப்பை வெளிப்படுத்திய எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோற்றதில்லை.
அந்த ராசி தர்மசாலாவிலும் தொடருமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையையும் களமிறக்கி பாஜக பிரசாரம் செய்தும் பலனளிக்காது! - மமதா
கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்!

போதிய பேருந்து வசதி இல்லை! 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியவில்லை! - Nirmal Kumar | TVK

தற்கொலை எண்ணத்தில் இருந்தேன்: ரத்னகுமார்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


