மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தீர்ந்தது குழப்பம்: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்தியா பங்கேற்பு!

வரும் ஜுன் ஒன்றாம் தேதி துவங்க இருக்கின்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணி பங்கேற்கும் ...

News image
Updated On :7 மே 2017, 8:30 am

DIN

புதுதில்லி: வரும் ஜுன் ஒன்றாம் தேதி துவங்க இருக்கின்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணி பங்கேற்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தற்பொழுது உறுதி செய்து உள்ளது.

உறுப்பு நாடுகளுக்கான வருமானப் பகிர்வு முறையில் மாற்றம் செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) எடுத்த முடிவின் காரணமாக வரும் ஜுன் ஒன்றாம் தேதி துவங்க இருக்கின்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்தியா பங்கேற்குமா அல்லது தனது எதிர்ப்பைப் பதிவு செய்ய புறக்கணிப்பில் ஈடுபடுமா என்ற சந்தேகம் நிலவி வந்தது. 

இதனிடையே சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணியை உடனடியாக தேர்வு செய்து அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி, கட்டுப்பட்டு வாரிய நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் தில்லியில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் நீண்ட விவாதத்திற்கு பிறகு சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி பங்கேற்கும் என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ செயலாளர் ராஜீவ் சுக்லா, “சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணியை அனுப்புவது என்று ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது; இதற்கான வீரர் தேர்வுக்காக தேர்வுக்குழு கூட்டம் நாளை நடக்கிறது" என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.