

சாம்பியன்ஸ் டிராபி ஜூன் 1 முதல் 18 வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் இடம்பெற்ற யுவ்ராஜ் சிங், சாம்பியன்ஸ் டிராபி போட்டி குறித்து கூறியதாவது:
ஐசிசி போட்டியில் இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவதில் மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய அணிக்காக நல்லமுறையில் பங்களிக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் உள்ளேன். இந்திய அணி கடினமான பிரிவில் உள்ளது. ஆனால் உள்ளூர் சீசனில் அற்புதமாக விளையாடிய இந்திய அணி தற்போது மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்குப் பிறகு அடுத்தடுத்து சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அணியாக இந்திய அணி இருக்கும். இங்கிலாந்தில் விளையாடுவது என்பது இந்தியாவில் விளையாடுவதுபோல. அங்கு ரசிகர்களின் ஆதரவு ஏராளமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.