மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டம்: 189 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து! 

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டத்தில், நியூசிலாந்து அணியை இந்தியா 189 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது.  

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:37 pm

DIN

லண்டன்: லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டத்தில், நியூசிலாந்து அணியை இந்தியா 189 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது.  

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 1-ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் தற்பொழுது அதற்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி மார்ட்டின் கப்தில், ரோஞ்சி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கப்தில் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 8 ரன்னிலும், ப்ரூம் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். இந்த மூன்று விக்கெட்டுக்களையும் மொகமது ஷமி வீழ்த்தினார்.

விக்கெட்டுகள் விழுந்த போதிலும் மறுமுனையில் ரோஞ்சி அதிரடியாக விளையாடினார். இதனால் முதல் 10 ஓவர்களில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் குவித்தது. ரோஞ்சி 66 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்தில் க்ளீன் போல்டானார். இதற்குப் பிறகு நியூசிலாந்து அணியின் ரன்விகிதம் குறைய ஆரம்பித்தது.

அதற்கடுத்து விளையாட வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் நியூசிலாந்து 38.4 ஓவரில் 189 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. நீசம் மட்டும் இறுதி வரை போராடி 46 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

இந்திய அணி சார்பில் மொகமது ஷமி தான் வீசிய 8 ஓவர்கள் 47 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை  வீழ்த்தினார். புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளும் , உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் தலா 1 விக்கெ வீழ்த்தினர்.

தற்பொழுது 90 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.