இந்தியாவை வீழ்த்த ஹாரீஸ் சோஹைல் யோசனை
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவை வீழ்த்த இந்தியாவுடன் விளையாடுகிறோம் என்பதை மறந்துவிட்டு விளையாட வேண்டும் என பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஹாரீஸ் சோஹைல் தெரிவித்துள்ளார்.


சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவை வீழ்த்த இந்தியாவுடன் விளையாடுகிறோம் என்பதை மறந்துவிட்டு விளையாட வேண்டும் என பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஹாரீஸ் சோஹைல் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற பெரிய போட்டிகளில் இதுவரை இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதில்லை. இந்த நிலையில் வரும் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் இந்தியாவை சந்திக்கிறது பாகிஸ்தான். வழக்கம்போல் இந்த ஆட்டமும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஹாரீஸ் சோஹைல் கூறியதாவது: சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக நாங்கள் சிறப்பாக தயாராகியிருக்கிறோம். கடந்த சில நாள்கள் எங்களுக்கு சிறப்பானவையாக அமைந்தன. இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் எங்களுக்கு மிகப்பெரிய ஆட்டமாகும். ஆனால் அதை சாதாரணமான ஓர் ஆட்டமாக கருதி விளையாட வேண்டும்.
கடினமான ஆட்டங்களுக்காக நாங்கள் எங்களை தயார்படுத்தியுள்ளோம். பந்துவீச்சும், பீல்டிங்கும்தான் எங்களின் பலம். எல்லா வகையிலும் நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம். இங்கிலாந்து சூழல் எங்களுக்கு கடினமானதுதான். ஆனால் அதற்கேற்றவாறு எங்களை தகவமைத்துக் கொண்டிருக்கிறோம். முதல் பயிற்சி ஆட்டத்துக்கு 10 நாள்கள் முன்னதாகவே நாங்கள் இங்கு வந்துவிட்டோம். சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் முதல் ஆட்டத்தில் விளையாடுவதற்கு 5 நாள் காலஅவகாசம் உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...