செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பத்மஸ்ரீ விருதுக்கு ஸ்ரீகாந்த் பெயர் பரிந்துரை!

2018-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுக்கு பாட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் பெயரை முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர்...

News image
Updated On :1 நவம்பர் 2017, 12:12 pm

எழில்

2018-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுக்கு பாட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் பெயரை முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் பரிந்துரை செய்துள்ளார்.

சமீபத்தில் டென்மார்க் ஓபன் பட்டம் வென்ற ஸ்ரீகாந்த், கடந்த இரு மாதங்களில் மொத்தமாக 4 பட்டங்களை கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் ஒரு சீசனில் 4 சூப்பர் சீரிஸ் பட்டங்கள் வென்ற 4-வது வீரர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் ஸ்ரீகாந்த்.

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், குடிமைப் பணி, வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்விருதுகள் தொழில், இனம், உத்தியோகம், பாலினம் ஆகிய வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது.

இந்நிலையில் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல், ஸ்ரீகாந்த் பெயரை பத்மஸ்ரீ விருதுக்குப் பரிந்துரை செய்துள்ளார். பத்மஸ்ரீ பட்டத்துக்குப் பரிந்துரை செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 15-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், ஸ்ரீகாந்த் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கோயல் கடிதம் எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.