நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

ஒரே போட்டியில் இரு ஹாட்ரிக்குகள் எடுத்து அசத்திய மிட்சல் ஸ்டார்க்! (வீடியோக்கள்)

கடந்த 40 வருடங்களில் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இவர் மட்டும்தான் இதுபோன்ற ஒரு சாதனையைச் செய்துள்ளார்...

News image
Updated On :7 நவம்பர் 2017, 12:10 pm

எழில்

முதல்தர கிரிக்கெட் போட்டியில் இரு ஹாட்ரிக்குகள் எடுத்துள்ளார் ஆஸி. பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்.

கடந்த 40 வருடங்களில் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இவர் மட்டும்தான் இதுபோன்ற ஒரு சாதனையைச் செய்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர்களில் இதுபோல ஒரே போட்டியில் இருமுறை ஹாட்ரிக் எடுத்த 2-வது வீரர் என்கிற பெருமையையும் அடைந்துள்ளார். ஒட்டுமொத்தமாக இதுவரை 7 வீரர்கள் முதல்தர கிரிக்கெட்டில் இச்சாதனையைப் புரிந்துள்ளார்கள்.

ஷெஃப்ஃபீல்டு ஷீல்ட் போட்டியில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நியூ சவுத்வேல்ஸ் வீரராக விளையாடிய ஸ்டார்க், முதல் இன்னிங்ஸில் ஹாட்ரிக்குடன் சேர்த்து 4 விக்கெட்டுகள் எடுத்தார். கடைசி மூன்று விக்கெட்டுகளையும் ஹாட்ரிக் மூலமாக எடுத்தார்.

இதன் பின்னர் வெஸ்டர் ஆஸ்திரேலிய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற 395 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இம்முறையும் கடைசி மூன்று விக்கெட்டுகளை ஹாட்ரிக் மூலமாக எடுத்து அசத்தினார். ஸ்டார்க்கின் அபாரமான பந்துவீச்சால் நியூ சவுத் வேல்ஸ் அணி 171 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஷஸ் போட்டி விரைவில் தொடங்கவுள்ள நிலையில் ஸ்டார்க், ஒரே போட்டியில் இரு ஹாட்ரிக்குகளை எடுத்துள்ளது ஆஸி. ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.

முதல் இன்னிங்ஸ் ஹாட்ரிக்!

2-வது இன்னிங்ஸ் ஹாட்ரிக்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.