முதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

ஆசிய குத்துச்சண்டை: மேரி கோம் சாம்பியன்

ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்...

News image
Updated On :8 நவம்பர் 2017, 7:47 am

எழில்

ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 

34 வயது மேரி கோம் 48 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதியில் ஜப்பானின் சுபாசா கோமுராவை 5-0 என்ற கணக்கில் வென்றதையடுத்து, இறுதிச்சுற்றில் வடகொரியாவின் கிம் ஹையாங் மியை எதிர்கொண்டார். ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இதுவரை 6 முறை பங்கேற்றுள்ள மேரி கோம், தற்போது 5-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இறுதிச்சுற்றில் கிம் ஹையாங் மியை 5-0 என்கிற கணக்கில் தோற்கடித்து சாம்பியன் ஆகியுள்ளார் மேரி கோம். 

இது, ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 48 கிலோ எடைப் பிரிவில் மேரி கோம் வெல்லும் முதல் தங்கம். ஆசிய குத்துச்சண்டை போட்டியில் மேரி கோம் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.