ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி அங்கு ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. இதற்காக அங்கு சென்ற இங்கிலாந்து அணி முதலில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் பங்கேற்று விளையாடியது.
அடிலெய்டில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி இங்கிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 293 ரன்கள் எடுத்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய லெவன் 233 ரன்கள் எடுத்தது. 60 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 207 ரன்களை எடுத்தது.
இந்நிலையில், 268 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஆஸி. லெவன் அணி 75 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி அடைந்தது.
இதனிடையே ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியின் துணைக் கேப்டனாக அந்த அணியின் மூத்த வீரரும், முன்னணி வேகப்பந்துவீச்சாளருமான ஜேம்ஸ் ஆண்டர்சன் தேர்வு செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உத்தரமேரூரில் 8 சுயேச்சைகள் உள்பட 14 போ் போட்டி!

நாட்டில் ரயில் பாதை இல்லாத ஒரே பேரவைத் தொகுதி திருப்பத்தூர்: அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழ், தமிழ்நாடு என்றாலே பாஜகவுக்கு வெறுப்பு : மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் 18,000 பாலியல் வழக்குகள் பதிவு: எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


