சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். எனினும், சாய்னா நெவால், ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோர் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.
சீனாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நடப்புச் சாம்பியனான சிந்து தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அந்நாட்டு வீராங்கனையான ஹான் யூவை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையே 40 நிமிடங்கள் விறுவிறுப்பாக நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் சிந்து 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
சிந்து தனது காலிறுதியில் சீனாவின் தகுதிச்சுற்று வீராங்கனையான காவ் ஃபாங்ஜியை சந்திக்கிறார்.
இதனிடையே, மகளிர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் ஜப்பானின் அகானே யமாகுசியை எதிர்கொண்ட சாய்னா, அதில் 18-21, 11-21 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டார். இத்துடன் யமாகுசியை 5 முறை சந்தித்துள்ள சாய்னா, 4-ஆவது முறையாக தோல்வி அடைந்துள்ளார்.
உலகின் 11-ஆம் நிலை வீரருமான பிரணாய், ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டார். அதில் உலகின் 53-ஆம் நிலை வீரரான ஹாங்காங்கின் செயுக் யியுவை எதிர்கொண்ட பிரணாய் 19-21, 17-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.