இந்திய அணியின் மூத்த வேகப்பந்துவீச்சாளராகத் திகழ்ந்தவர் ஆஷிஷ் நெஹ்ரா. காயங்களால் அவதிப்பட்டாலும் அதிலிருந்து மீண்டு இந்திய அணிக்குத் திரும்பும் திறன் பெற்றவர்.
சர்வதேச அரங்கில் சுமார் 18 வருடங்களாக விளையாடினாலும் தொடர் காயம் காரணமாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 உட்பட அனைத்து வகை கிரிக்கெட்டையும் சேர்த்து மொத்தம் 164 போட்டிகளில் மட்டுமே விளையாடி 235 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
கடந்த நியூஸிலாந்து டி20 தொடருடன் தனது 38-ஆவது வயதில் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார்.
இந்நிலையில், ஆஷிஷ் நெஹ்ரா புது அத்தியாயமாக தனது அடுத்த இன்னிங்ஸை தொடங்கினார். இதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கையுடனான இந்த டெஸ்ட் தொடர் முதல் தொலக்காட்சி வர்ணனையாளராக களமிறங்கினார் ஆஷிஷ் நெஹ்ரா. அதற்கு, ''நெஹ்ரா ஜீ வர்ணனையாளராக களமிறங்கியுள்ள உங்களை வரவேற்கிறேன்'' என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
சேவாக் மற்றும் நெஹ்ரா ஆகியோர் ஆரம்ப காலத்தில் தில்லி அணி மற்றும் இந்திய அணிக்காக ஒன்றாக கிரிக்கெட் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உத்தரமேரூரில் 8 சுயேச்சைகள் உள்பட 14 போ் போட்டி!

நாட்டில் ரயில் பாதை இல்லாத ஒரே பேரவைத் தொகுதி திருப்பத்தூர்: அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழ், தமிழ்நாடு என்றாலே பாஜகவுக்கு வெறுப்பு : மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் 18,000 பாலியல் வழக்குகள் பதிவு: எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


