வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

உலக ஜூனியர் செஸ் போட்டி: 5-வது சுற்றிலும் கிராண்ட் மாஸ்டரைத் தோற்கடித்த 12 வயது பிரக்ஞானந்தா!

இத்தாலியில் நடைபெற்று வரும் U-20 அளவிலான உலக ஜூனியர் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 12 வயது இந்திய வீரர் பிரக்ஞானந்தா...

News image
Updated On :18 நவம்பர் 2017, 11:03 am

எழில்

இத்தாலியில் நடைபெற்று வரும் U-20 அளவிலான உலக ஜூனியர் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 12 வயது இந்திய வீரர் பிரக்ஞானந்தா, கிராண்ட் மாஸ்டர் எஸ். எல். நாராயணனைத் தோற்கடித்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

இதற்கு முந்தைய சுற்றில் போட்டியின் முதல்நிலை வீரர் கிராண்ட் மாஸ்டர் ஜார்டன் வான் ஃபாரஸ்டைத் தோற்கடித்த பிரக்ஞானந்தா அடுத்தச் சுற்றிலும் மற்றொரு கிராண்ட் மாஸ்டரைத் தோற்கடித்து கவனம் ஈர்த்துள்ளார். ஐந்து சுற்றுகளின் முடிவில் 4.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார் பிரக்ஞானந்தா. மற்றொரு தமிழக வீரரான அரவிந்த் சிதம்பரம் தொடர்ந்து நான்காவது வெற்றியைப் பெற்று நான்கு புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.   

இத்தாலியின் டிரவிசியோவில் நடைபெற்று வரும் இப்போட்டியில், ஐந்து சுற்றுகளின் முடிவில் ஐந்து புள்ளிகளுடன் ரஷ்யாவைச் சேர்ந்த கிரிலி முதலிடம் வகிக்கிறார். இரண்டாம் இடத்தில் பிரக்ஞானந்தா உள்ளிட்ட மூன்று பேர் உள்ளார்கள். 

மகளிர் பிரிவில் இந்தியாவின் அகான்க்‌ஷா 4 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி 3.5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளார்கள்.

இந்தப் போட்டியில் ஆண்கள் பிரிவில் 62 நாடுகளிலிருந்து 148 வீரர்களும் மகளிர் பிரிவில் 48 நாடுகளிலிருந்து 89 வீராங்கனைகளும் கலந்துகொண்டுள்ளார்கள். 11 சுற்றுகளின் முடிவில் நவம்பர் 25 அன்று வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வெற்றியாளர்களுக்குக் கிட்டத்தட்ட ரூ. 2 லட்சம் (1.91 லட்சம்) பரிசுத்தொகை வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.