சென்னை: தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்டிங் நட்சத்திரமான ஹசிம் ஆம்லா, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வினோதமான சாதனை ஒன்றினை படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் உலகின் குறிப்பிடத்தக்க ரன் குவிப்பாளர்களில் தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லாவும் ஒருவர். சர்வதேச ஒருநாள் போட்டிகளில், மிகக் குறைவான போட்டிகளில் 2000 ரன்கள், 3000 ரன்கள், 4,000 ரன்கள், 5000 ரன்கள், 7000 ரன்கள் எடுத்தவர் என்ற சாதனை இவர் வசம் உள்ளது.
தற்பொழுது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆட்டமிழப்பதில் அவர் ஒரு புதிய வினோத சாதனையை படைத்துள்ளார். தற்போது வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா விளையாடி வருகிறது. நேற்று நடந்த ஆட்டத்தின்போது, அவர் 137 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
ஆம்லாவின் விக்கெட் டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தப்படும் 70 ஆயிரம் விக்கெட்டாகும். 2010-ல் டெஸ்ட் கிரிக்கெட்டின் 60 ஆயிரமாவது விக்கெட்டாக ஆட்டமிழந்ததும் ஆம்லாதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல கடந்த ஆண்டு டிசம்பரில், டெஸ்ட் போட்டியின் 10 ஆயிரமாவது எல்பிடபிள்யூ விக்கெட்டாக வீழ்ந்ததும் ஆம்லாதான்.
இப்படி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆட்டமிழப்பதில் அவர் ஒரு ‘சாதனை மன்னனாக’ இருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்
நேரம் தவறாமை, நேர்த்தி, தொழிலுக்கு மரியாதை... விஜய் நேர்காணல் -2!

உண்மையில் ரோபோ வாக்யூம் க்ளீனர்களை வாங்கலாமா? மீம்ஸ்களால் குழப்பம்
டிராக் ரெகார்ட்! 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் - முதல்வர் விஜய் சொன்னதும் செய்ததும்!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



