மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு! அஸ்வின், ஜடேஜாவுக்கு மீண்டும் இடமில்லை!

நியூஸிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது...

News image
Updated On :14 அக்டோபர் 2017, 12:36 pm

எழில்

நியூஸிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடரிலும் அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு இடமளிக்கப்படவில்லை. குல்தீப் யாதவ், சாஹல், அக்‌ஷர் படேல் ஆகியோர் சிறப்பாகத் திறமையை வெளிப்படுத்தியுள்ளதால் மீண்டும் இவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் கேஎல் ராகுல் இடம்பெறவில்லை.

இந்தியா, நியூஸிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் அக்டோபர் 22 முதல் நவம்பர் 7 வரை நடைபெறவுள்ளன. ஒருநாள் போட்டிகள் மும்பை, புணே, கான்பூர் ஆகிய நகரங்களிலும், டி20 போட்டிகள் டெல்லி, ராஜ்கோட், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களிலும் நடைபெறவுள்ளன.

இந்திய அணி

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவன், அஜிங்க்ய ரஹானே, மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஸ்வர் குமார், ஷர்துல் தாக்குர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.