ஃபிஃபா விருது: சிறந்த கால்பந்து வீரர் - ரொனால்டோ!
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஃபிஃபா அமைப்பின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை...


போர்ச்சுக்கல் அணியைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஃபிஃபா அமைப்பின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை 5-வது முறையாகப் பெற்றுள்ளார்.
2017-ம் ஆண்டுக்கான ஃபிபா விருதுகள் லண்டனில் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் ஃபிபா கால்பந்து அமைப்பின் சிறந்த வீரராக ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே மெஸ்ஸி மற்றும் நெய்மார் ஆகியோர் பெற்றார்கள். சிறந்த வீரருக்கான விருதை மெஸ்ஸி 5 முறை பெற்றுள்ளார். அச்சாதனையை சமன் செய்துள்ளார் ரொனால்டோ. இவர், கடந்த வருடமும் இவ்விருதைப் பெற்றார்.
போர்ச்சுகல் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுக்காகத் தன் திறமையை வெளிப்படுத்தியதால் ரொனால்டோவுக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. லா லிகா, சாம்பியன்ஸ் லீக் என இரு போட்டிகளிலும் இவர் பங்கேற்ற ரியல் மாட்ரிட் அணி பட்டம் வென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...