மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

முன்னாடி பின்னாடி தமிழ் வார்த்தைகள் எனக்குத் தெரியாதா?: சச்சின் பகிர்ந்துகொண்ட சுவையான சம்பவம்

நான் 15 வருடம் இந்திய அணியில் இருந்து சென்னை வீரர்கள் பலருடன் பழகியிருக்கிறேன்...

News image
Updated On :24 அக்டோபர் 2017, 6:21 am

எழில்

பஞ்சதந்திரம் படத்தில் வந்த முன்னாடி, பின்னாடி நகைச்சுவைக் காட்சியைத் தெரியாத தமிழ்த் திரைப்பட ரசிகர்களே இருக்கமுடியாது. சச்சினின் இந்த காணொளியைப் பார்க்கும்போது அந்த நகைச்சுவைக் காட்சிதான் ஞாபகத்துக்கு வருகிறது. 

முன்னாடி, பின்னாடி போன்ற தமிழ் வார்த்தைகள் தனக்குத் தெரியும் என்று அது தொடர்பான ஒரு சுவையான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். ஒரு விழாவில் அவர் இதுகுறித்து கூறியதாவது: 

தமிழ்நாடு - மும்பை இடையேயான போட்டி மும்பையில் நடைபெற்றது. அப்போது பந்தில் ரிவர்ஸ் ஸ்விங் நன்கு வந்தது. இதனால் கிரிஸை விட்டு 2 அடி முன்னே நின்றேன். பந்துவீச்சாளர்களின் திட்டங்களை முறியடிப்பதற்காக. பாயிண்டில் நின்றிருந்த ஹேமங் பதானி, பந்துவீச்சாளரிடம் முன்னாடி முன்னாடி என்று தமிழில் யோசனை கூறினார். நான் 15 வருடம் இந்திய அணியில் இருந்து சென்னை வீரர்கள் பலருடன் பழகியிருக்கிறேன். எனவே என்னால் ஓரளவு தமிழைப் புரிந்துகொள்ளமுடியும். முன்னாடி, பின்னாடி போன்ற தமிழ் வார்த்தைகளை அறிவேன். எனவே ஹேமங் பதானி என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் என் பேட்டிங் உத்தியை மாற்றினேன் என்றார். 

இதன் வீடியோவை முன்னாள் வீரர் ஹேமங் பதானி சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். நீங்கள் சச்சின் போன்ற ஒருவரிடம் தமிழில் பேசி குழப்பமடையச் செய்யமுடியுமா? கடவுளே, வாய்ப்பே இல்லை. இந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.