புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அஸ்வின், ஜடேஜா அணிக்கு திரும்புவது கடினம்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இளம் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். அதனால் மூத்த சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின்

News image
Updated On :22 செப்டம்பர் 2017, 7:30 pm

DIN

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இளம் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். அதனால் மூத்த சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணிக்குத் திரும்புவது கடினம் என மூத்த சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வரும் நிலையில் ஹர்பஜன் சிங் கூறியதாவது: 
இந்திய அணியில் தற்போதுள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதால், மூத்த சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்புவது மிக மிக கடினம். ஆடுகளம், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இல்லாதபோதும்கூட மணிக்கட்டை பயன்படுத்தி பந்துவீசக்கூடிய குல்தீப், சாஹல் போன்றவர்களால் சிறப்பாக செயல்பட முடியும். சாஹல் அற்புதமாக கூக்ளி பந்துவீச்சை கையாள்வதோடு, மிகத் துல்லியமாக லெக் ஸ்பின்னும் வீசுகிறார். குல்தீப் யாதவ் இருபுறமும் பந்தை சுழல விடுகிறார். எனவே இவர்களின் இடத்தை அஸ்வின், ஜடேஜாவால் பிடிக்க முடியும் என நான் நினைக்கவில்லை என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.