ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

இந்திய  வரைபடத்தை கிண்டல் செய்த ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர்: டிவிட்டரில் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! 

இந்திய  வரைபடத்தை அநாகரிகமான முறையில் கிண்டல் செய்த ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளருக்கு சமூக வலைத்தளமான டிவிட்டரில் பயனாளர்கள் பாடம் புகட்டிய சம்பவம நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :28 செப்டம்பர் 2017, 12:36 pm

சிட்னி: இந்திய  வரைபடத்தை அநாகரிகமான முறையில் கிண்டல் செய்த ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளருக்கு சமூக வலைத்தளமான டிவிட்டரில் பயனாளர்கள் பாடம் புகட்டிய சம்பவம நிகழ்ந்துள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் டெனிஸ் பிரீட்மன். இவர் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான கட்டுரைகள் எழுதி புகழ்பெற்றவர். இவர் சில நாட்களுக்கு முன்னால் தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினைப்  பகிந்திருந்தார். அதில் தனக்கு பெண் ஒருவர் அனுப்பியதாகக் கூறி,  பெண்கள் அணியும் உள்ளாடை புகைப்படம் ஒன்றுடன் இந்திய வரைபடத்தினை இணைத்து வெளியிட்டு இருந்தார். அத்துடன் இங்கு எதற்காக இந்திய வரைபடத்தினை அவர் அனுப்பியிருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் கு றிப்பிட்டிருந்தார்.

Story image

அவர் இதனை வெளியிட்டவுடன் உலகெங்கும் உள்ள டிவிட்டர் பயனாளர்கள் பலரும் அவரைக்  கண்டித்துப் பதிவுகள் இட்டனர். அதில் அவரை கடுமையாகக் கிண்டல் செய்தும், அவருக்கு புத்திமதி கூறியும், அவரது அநாகரிகமான செயலைக் கண்டித்தும் எழுதப்பட்ட பதிவுகளும் அடக்கம்.

அதிலும் ஒரு பயனர் டெனிஸ் பிரீட்மன் செய்தது போலவே ஆஸ்திரேலிய வரைபடத்தினை விலங்கு ஒன்றின் சாணத்துடன் ஒப்பிட்டு படம் ஒன்றினை பகிர்ந்திருந்தார்.

Story image

டெனிஸ் பிரீட்மன் சில நாட்களுக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி 'ஸ்வச் பாரத்' திட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் புகைப்படத்தினை வெளியிட்டு 'தெருக் கூட்டுபவர்கள்' என்று கிண்டல் செய்து பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.