சுடச்சுட

  

  கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகள் அறிவிப்பு: மாரியப்பன், புஜாரா உள்ளிட்டோருக்கு விருது 

  By DIN  |   Published on : 22nd August 2017 05:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pujara-mariappan

   

  2017-ம் ஆண்டுக்கான விளையாட்டின் உயரிய விருதுகளான துரோணாச்சாரியார் விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது, தயான் சந்த் விருது உள்ளிட்டவை செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டது. 

  பாரா ஒலிம்பிக்கில் ஆடவர் பிரிவு ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியா, முன்னாள் இந்திய ஹாக்கி அணி கேப்டன் சர்தார் சிங் உள்ளிட்டோர் கேல் ரத்னா விருதுகளால் கௌரவிக்கப்படுகிறார்கள்.

  புபேந்தர் சிங் (அத்லெடிக்ஸ்), சையது ஷாஹித் ஹக்கிம் (கால்பந்து) மற்றும் சுமாராய் திதி (ஹாக்கி) உள்ளிட்டோருக்கு விளையாட்டுத்துறையின் வாழ்நாள் சாதனையாளருக்கான தயான் சந்த் விருது வழங்கப்படுகிறது.

  மறைந்த டாக்டர் ஆர். காந்தி (அத்லெடிக்ஸ்), ஹீரா நந்த் கடாரியா (கபடி), ஜி.எஸ்.எஸ்.வி. பிரசாத் (பாட்மிண்டன்), ப்ரிஜ் பூஷன் மொஹாந்தி (குத்துச்சண்டை), பி.ஏ.ரஃபேல் (ஹாக்கி), சஞ்சய் சக்ரவர்த்தி (துப்பாக்கிச்சுடுதல்), ரோஷன் லால் (மல்யுத்தம்) ஆகியோருக்கு தலைசிறந்த வாழ்நாள் பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியார் விருது வழங்கப்படவுள்ளது.

  இதில், ராஜீவ் காந்தி கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலில் நீதிபதி சி.கே. தக்கர் தேர்வு செய்து அறிவித்தார். அதுபோல துரோணாச்சாரியார் மற்றும் தயான் சந்த் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலை புல்லேலா கோபிசந்த் தேர்வு செய்து அறிவித்தார். 

  சம்பந்தப்பட்ட விருதுகளுக்காகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவருக்கும் வருகிற ஆக்ஸ்ட் 29-ந் தேதி குடியரசுத்தலைவர் மாளிகையில் ராம்நாத் கோவிந்த் கௌரவப்படுத்துகிறார்.

  தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் விருது மட்டுமல்லாமல் கேல் ரத்னா விருதுக்கு ரூ. 7.5 லட்சம் வழங்கப்படுகிறது. அதுபோல அர்ஜுனா, துரோணாச்சாரியார் மற்றும் தயான் சந்த் ஆகிய விருது வென்றவர்களுக்கு விருதுடன் சேர்த்து ரூ. 5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.

  அர்ஜுனா விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா, பாரா ஒலிம்பிக் தங்கமகன் மாரியப்பன் தங்கவேலு, இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஹர்மான்ப்ரீத் கௌர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

  அர்ஜுனா விருது வென்றவர்கள் விவரம் பின்வருமாறு:

  வி.ஜே. சுரேகா (வில்வித்தை)

  குஷ்பீர் கௌர் (தடகளம்)

  ஆரோக்கிய ராஜீவ் (தடகளம்)

  பிரஷாந்தி சிங் (கூடைப்பந்து)

  லைஷ்ராம் தேபேந்த்ரோ சிங் (குத்துச்சண்டை)

  சேத்தேஷ்வர் புஜாரா (கிரிக்கெட்)

  ஹர்மான்ப்ரீத் கௌர் (கிரிக்கெட்)

  ஓய்னம் பெம்பெம் தேவி (கால்பந்து)

  எஸ்.எஸ்.பி. சௌவ்ராஸியா (கால்ஃப்)

  எஸ்.வி.சுனில் (ஹாக்கி)

  ஜஸ்வீர் சிங் (கபடி)

  பி.என். பிரகாஷ் (துப்பாக்கிச் சுடுதல்)

  ஏ.அமல்ராஜ் (டேபிள் டென்னிஸ்)

  சாகித்மைனேனி (டென்னிஸ்)

  சத்யவர்காதியான் (மல்யுத்தம்)

  மாரியப்பன் (பாரா ஒலிம்பிக் வீரர்)

  வருண் சிங் பட்டி (பாரா ஒலிம்பிக் வீரர்)

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai