தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

சூழ்நிலைகள் மாறும்; மீண்டும் ரன்கள் குவிப்பேன்

ரன்கள் சேகரிப்பதில் தடுமாறி வரும் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், தான் ரன்கள் குவிக்கும் வகையிலான சூழ்நிலை மீண்டும் வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :21 மார்ச் 2017, 7:11 pm

ரன்கள் சேகரிப்பதில் தடுமாறி வரும் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், தான் ரன்கள் குவிக்கும் வகையிலான சூழ்நிலை மீண்டும் வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்துள்ள வார்னர், இதுவரையிலான 3 டெஸ்ட் போட்டிகளிலுமாக, 6 இன்னிங்ஸ்களில் மொத்தம் 131 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இந்நிலையில், ரன் சேகரிப்பில் தனது தடுமாற்றம் குறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது:
என்னைப் பொறுத்த வரையில், இதைவிடச் சிறப்பாக பேட்டிங் செய்ய இயலாது என்று கருதுகிறேன். எனது பேட்டிங் முறையில் எந்த தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், சரியான தருணத்தில் ரன்கள் எனக்கு கிடைப்பதில்லை.
எனக்கான சரியான சூழ்நிலை மீண்டும் வரும். அப்போது நான் முன்புபோல ரன்கள் குவிப்பேன். அதுவரையில், நான் வழக்கம்போலவே போட்டிகளுக்கு என்னை தயார்படுத்திக்கொள்வேன். இத்தகைய கடுமையான சூழ்நிலைகளை நான் மட்டுமே சந்திக்கவில்லை. கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களும் இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளனர் என்று டேவிட் வார்னர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.