தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தியோதர் டிராபி கிரிக்கெட் போட்டி: ப்ளூ, ரெட் அணி வீரர்கள் அறிவிப்பு

தியோதர் டிராபி கிரிக்கெட் போட்டிக்கான இந்தியா ப்ளூ, இந்தியா ரெட் அணிகளுக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் ’ப்ளூ' அணி கேப்டனாக ரோஹித் சர்மா, ’ரெட்' அணி கேப்டனாக பார்த்திவ் படேல்

Updated On :21 மார்ச் 2017, 7:07 pm

தியோதர் டிராபி கிரிக்கெட் போட்டிக்கான இந்தியா ப்ளூ, இந்தியா ரெட் அணிகளுக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் ’ப்ளூ' அணி கேப்டனாக ரோஹித் சர்மா, ’ரெட்' அணி கேப்டனாக பார்த்திவ் படேல் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறியதாவது:
விஜய் ஹசாரே போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மூத்த வீரர் ஹர்பஜன் சிங், ப்ளூ அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தோனி, யுவராஜ் சிங் ஆகிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ரெய்னா இந்தப் போட்டியிலும் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.
தியோதர் டிராபிக்கான 3-ஆவது அணியாக தமிழ்நாடு அணி தேர்வாகும் எனத் தெரிகிறது. இதனிடையே, ப்ளூ அணிக்கான விக்கெட் கீப்பராக ரிஷப் பேன்ட்டும், ரெட் அணிக்கான கீப்பராக கேப்டன் பார்த்திவ் படேலும் உள்ளனர். தமிழக அணிக்கு தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக செயல்படுவார்.
சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன்பாக கடைசியாக நடைபெறும் இந்த 50 ஓவர் போட்டியில், ஷிகர் தவன், அம்பட்டி ராயுடு, மணீஷ் பாண்டே உள்பட பலரும், புதிய முகங்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என்று பிசிசிஐ வட்டாரங்கள் கூறின.
இந்தியா ப்ளூ அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), மன்தீப் சிங், ஷ்ரேயாஸ் ஐயர், அம்பட்டி ராயுடு, மனோஜ் திவாரி, ரிஷப் பேன்ட், தீபக் ஹூடா, ஹர்பஜன் சிங், கிருனால் பாண்டே, ஷாபாஸ் நதீம், சித்தார்த் கெளல், ஷர்துல் தாகுர், பிரசித் கிருஷ்ணா, பங்கஜ் ராவ்.
இந்தியா ரெட் அணி: பார்த்திவ் படேல் (கேப்டன்), ஷிகர் தவன், மணீஷ் பாண்டே, மயங்க் அகர்வால், கேதர் ஜாதவ், இஷாங் ஜக்கி, குர்கீரத் மான், அக்ஸர் படேல், அக்ஷய் கர்னேவர், அசோக் தின்டா, குல்வந்த் கெஜ்ரோலியா, தவல் குல்கர்னி, கோவிந்தா போடார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.