மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அதிக பந்துகளை வீசி ஆண்டர்சன் புது சாதனை!

இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிக பந்துகளை வீசி புது சாதனைப் படைத்துள்ளார்.

News image
Updated On :3 ஏப்ரல் 2018, 10:44 am

நியூஸிலாந்து சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் மார்ச் 22 முதல் மார்ச் 26 வரை நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. 

பின்னர் 2-ஆவது டெஸ்ட் போட்டி மார்ச் 30 தொடங்கி ஏப்ரல் 3 வரை கிறைஸ்ட்சர்ச்சில் அமைந்துள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து கைப்பற்றியது.

இதில், இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகள் வீசிய வேகப்பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

2-ஆவது டெஸ்ட் போட்டியின் 17-ஆவது ஓவரின் போது அவர் இந்த மைல்கல்லை எட்டினார். இதன்மூலம் 30,019 பந்துகளை வீசியுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் கார்ட்னி வால்ஷின் சாதனையை முறியடித்து 30,020 பந்துகளை வீசி சாதனைப் படைத்தார். 

Story image

தற்போது உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர்களான ஷேன் வார்னே, அனில் கும்ப்ளே மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோருக்கு அடுத்தபடியாக டெஸ்ட் போட்டியில் அதிக பந்துகளை வீசியுள்ள பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

முன்னதாக, 2015-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது வரை 531 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.