இந்திய கிரிக்கெட் அணியின் உள்நாட்டு தொடர் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்புக்கான உரிமையை ரூ.6138.1 கோடிக்கு ஸ்டார் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.
பிசிசிஐ சார்பில் உலகளாவிய ஒருங்கிணைந்த உரிமை என 3 வகைகளில் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான ஏலத்தை நடத்தியது. இதில் ஸ்டார் இந்தியா, ஜியோ, சோனி உள்ளிட்ட நிறுவனங்கள் மோதின.
3 நாள்கள் நடந்த ஏலத்தின் முதல் நாளில் மொத்தம் ரூ.4442 கோடிக்கு மதிப்பு காணப்பட்டது. இரண்டாவது நாளில் ஏலத்தின் மதிப்பு ரூ.6 ஆயிரம் கோடியை நெருங்கியது.
இந்நிலையில் ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூ.6138.1 கோடிக்கு கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ளது. இதன் மூலம் ஸ்டார் நிறுவனம் உலகளாவிய கிரிக்கெட் போட்டி ஒட்டுமொத்த உரிமைகளையும் தன்வசம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








