சென்னை சூப்பர் கிங்ஸ் அணி-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே ஆன 5-வது ஐபிஎல் போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
சூதாட்டப் புகார் காரணமாக 2 ஆண்டுகள் தடைக்கு பின் சிஎஸ்கே அணி தனது துவக்க ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியை அபாரமாக ஆடி வீழ்த்தியது. இதற்கிடையே சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் 2 ஆண்டுகளுக்கு பின் கொல்கல்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. போட்டிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. சென்னையைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அனுபவம் வாய்ந்த தோனி, ஹர்பஜன் சிங், பிராவோ, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, தாஹீர், மார்க் உட், உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். முக்கிய வீரரான டுபிளெசிஸ் விரலில் முறிவு காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
காயமுற்ற கேதர் ஜாதவுக்கு பதிலாக வேறு வீரர் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கே அணி பந்துவீச்சு சற்று வலு குறைந்து காணப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் மிதவேக பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்களே சிஎஸ்கே அணியில் உள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர் அணி வலுவான பந்துவீச்சாளர்களை கொண்டுள்ளது. மைதானத்தின் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் நைட் ரைடர்ஸ் அணியின் சுனீல் நரேன், லீன், உத்தப்பா, ஆன்ட்ரெ ரஸ்ஸல், வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஜான்சன் ஆகியோர் பக்கபலமாக இருப்பர். ஆனால் பேட்டிங் வரிசை வலுவிழந்து உள்ளது. குறிப்பாக மூத்த வீரரான வினய்குமார் பார்மில் இல்லாத நிலை அணிக்கு பாதகமாக உள்ளது. கிறிஸ் லினும் சரியாக ஆடாத பட்சத்தில் சுனில் நரேனையே சார்ந்திருக்கும் சூழல் உள்ளது.
தனது முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வென்ற தெம்புடன் நைட் ரைடர்ஸ் அணி களமிறங்குகிறது.
அணிகள்
சூப்பர் கிங்ஸ்: தோனி (கேப்டன்), கேஎம்.ஆசிப், சாம் பில்லிங்ஸ், சைதன்யா பிஷ்னாய், டிவைன் பிராவோ, தீபக் சச்சார், டுபிளெசிஸ், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹீர், ரவீந்திர ஜடேஜா, கேதர் ஜாதவ், நாராயண் ஜகதீசன், ஷிட்ஸ் சர்மா, மோனு குமார், நிகிடி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, மிச்செல் சான்டர், கனிஷ்க் சேத், கர்ன் சர்மா, துருவ் ஷோரே, சர்துல் தாகுர், முரளி விஜய், ஷேன் வாட்சன், மார்க் உட்.
நைட் ரைடர்ஸ்: தினேஷ் கார்த்திக் (கே), பியுஷ் சாவ்லா, டாம் கர்ரன், கேமரான் டெல்போர்ட், இஷாங் ஜக்கி, மிச்செல் ஜான்சன், குல்தீப் யாதவ், கிறிஸ் லின், கமலேஷ், சுனில் நரேன், நிதிஷ் ரானா, ஆன்ட்ரெ ரஸ்ஸல், ஜவோன் சியர்லஸ், சிவம் மவி, சுப்மன் கில், ரிங்கு சிங், ராபின் உத்தப்பா, வினய்குமார், அப்பர்வ் வாங்கடே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி. படகு விபத்து: உயிரிழந்தோா் எண்ணிக்கை 11-ஆக அதிகரிப்பு

பூ பறிக்கும் பெண்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா்
பள்ளி ஆசிரியா்கள் நியமன முறைகேடு: மேற்கு வங்க முன்னாள் அமைச்சா் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் தோற்கடிக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் தேசிய பொதுச் செயலா் எம்.ஏ. பேபி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


