மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மகளிர் கிரிக்கெட்: 113 ரன்களுக்குச் சுருண்டது இந்திய அணி!

2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

News image
Updated On :9 ஏப்ரல் 2018, 7:22 am

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. 

நாகபுரியில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் 2-வது ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

எனினும் இங்கிலாந்து அணியின் அற்புதமான பந்துவீச்சால் 9-வது ஓவர் முதல் இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. மந்தனா அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். 3 வீராங்கனைகள் தவிர இதர வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி கடும் நெருக்கடியைச் சந்தித்தது.

கடைசியில், 37.2 ஓவர்களில் 113 ரன்களுக்கு இந்திய மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டேனீல் ஹஸல், சோபி எக்லஸ்டோன் ஆகிய இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் 2-வது ஒருநாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி வெல்லக்கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.