/

காமன்வெல்த்: இந்தியாவுக்கு மல்யுத்தத்தில் மேலும் ஒரு தங்கம்!

மல்யுத்தப் போட்டியில் மகளிருக்கான 50 கிலோ பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் தங்கம் வென்றுள்ளார்...

News image
Updated On :14 ஏப்ரல் 2018, 8:12 am

எழில்

கடந்த 5-ம் தேதி முதல் காமன்வெல்த் போட்டிகள் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகின்றன. 71 நாடுகளைச் சேர்ந்த 4500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 226 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், குத்துச்சண்டை உள்ளிட்டவற்றில் தங்கம் வென்று இந்திய வீரர்கள் சாதனை புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் மல்யுத்தப் போட்டியில் மகளிருக்கான 50 கிலோ பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் தங்கம் வென்றுள்ளார். இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் அவர் கனடாவின் ஜெஸிகா மெக்டொனால்டைத் தோற்கடித்துத் தங்கம் வென்றார். மேலும், 62 கிலோ பிரிவில் இந்தியாவின் சாக்‌ஷி மாலிக் வெண்கலம் வென்றுள்ளார். 

இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்லும் 23-வது தங்கம் இது. ஒட்டுமொத்தமாக 51 பதக்கங்களுடன் இந்திய அணி பதக்கப்பட்டியலில் 3-ம் இடத்தில் நீடிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.