2018 காமன்வெல்த் போட்டிகளில் பாட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் குவித்து வந்தனர்.
இந்நிலையில், ஆடவர் இரட்டையர் பிரிவு பாட்மிண்டன் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், இந்தியாவின் சாத்விக் ராங்கிரெட்டி மற்றும் சிராக் சந்திரசேகர் ஷெட்டி ஜோடி இங்கிலாந்தின் மார்கஸ் ஈலிஸ் மற்றும் கிறிஸ் லாங்க்ரிட்ஜ் ஜோடியுடன் மோதியது.
சுமார் 40 நிமிடங்களாக நீடித்த இப்போட்டியில் 13-21 மற்றும் 16-21 என்ற நேர் செட் கணக்கில் இங்கிலாந்து ஜோடி வெற்றிபெற்று தங்க பதக்கம் வென்றது. ஆகவே இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய ஜோடிக்கு வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தத் தேர்தலில் தேமுதிகதான் 'கேம் சேஞ்சர்': பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு நேர்காணல்

வீட்டில் பதுக்கிய 1,361 மது புட்டிகள் பறிமுதல்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி: தமிழகமே கவனிக்கும் திமுகவின் கோட்டை!

18.4.1976: தமிழ் நாட்டில் கைதானோரில் 90% விடுதலை - உள் துறை அமைச்சர் தகவல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


