இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

புதிய சாதனைபடைத்தார் ரோஜர் பெடரர்

பிரபல டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர் மேலும் ஒரு சாதனையைப் படைத்துள்ளார்.

News image
Updated On :19 ஏப்ரல் 2018, 1:15 am IST

பிரபல டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர் மேலும் ஒரு சாதனையைப் படைத்துள்ளார்.
36 வயதான பெடரர் அதிக முறை ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பட்டங்களை (20 முறை) வென்ற சாதனை புரிந்துள்ளார். மேலும் கடின தரையில் 87.6 சதவீதம் வெற்றி பெற்றது, அதிக வயதில் உலகின் முதல்நிலை வீரராக திகழ்ந்தது போன்ற சாதனைகள் அவர் வசம் உள்ளன.
அவரது பல சாதனைகள் முறியடிக்கப்படுமா என்ற நிலையில் அவர் மேலும் சாதனையை படைத்துள்ளார். உலகின் முதல் நான்கு வீரர்களில் 700 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தை வகித்த ஏடிபி வீரர் என்ற சாதனையை பெடரர் படைத்துள்ளார். 
மேலும் 300 வாரங்கள் நம்பர் ஒன் வீரர், 500 வாரங்கள் இரண்டாம் நிலை, 600 வாரங்கள் மூன்றாம் நிலை வீரர் போன்ற பெருமைகளை பெற்றுள்ளார். கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஒபன் போட்டியில் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்த விம்பிள்டன் போட்டியில் பங்கேற்பதில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.