ஆக்லாந்தில் நடைபெறவுள்ள நியூஸிலாந்து சூப்பர் 300 பாட்மிண்டன் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர்.
காயம் காரணமாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்காத அஜய் ஜெயராம், செளரப் வர்மா ஆகியோர் சூப்பர் 300 போட்டியில் கலந்து கொள்கின்றனர். ஜெயராம் தனது தொடக்க ஆட்டத்தில் தைபேவின் சூ ஜென்னை எதிர்கொள்கிறார். ஸ்வின் ஓபன் போட்டியில் காயமுற்ற செளரப் ஆஸி.யின் அபிநவ் மனோட்டாவே எதிர்கொள்கிறார்.
இந்திய அணியின் இதர வீரர்கள் சாய் பிரணீத், சமீர் வர்மா, லக்ஷயா சென், சுபாங்கர் தேவ், கரண் ராஜன் ஆகியோரும் ஆடவர் பிரிவில் பங்கற்கின்றனர்.
மகளிர் பிரிவில் வைஷ்ணவி ரெட்டி, ரிதுபர்ணா தாஸ், சாய் உஜெத்தா ராவ், கிருஷ்ண பிரியா, ஆகியோரும், இரட்டையர் பிரிவில் மனு அட்ரி-சுமித்ரெட்டி, அர்ஜுன் ரெட்டி-ராமச்சந்திரன், பிரான்சிஸ் அஸ்வின்-நந்தகோபால் இணைகளும், மகளிர் பிரிவில் மேக்னா-பூர்விஷா இணைகள், கலப்பு இரட்டையரில் பிரணவ் ஜெர்ரி-சிக்கிரெட்டி, இணைகளும் பங்கேற்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.