மெஸ்ஸியின் ஹாட்ரிக்கால் லா லிகா பட்டம் வென்றது பார்சிலோனா

லியோனல் மெஸ்ஸியின் ஹாட்ரிக் கோலால் ஸ்பெயின் லா லிகா கால்பந்து சாம்பியன் பட்டத்தை பார்சிலோனா அணி தட்டிச் சென்றது.
லா லிகா கால்பந்து போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த லியோனல் மெஸ்ஸி.
லா லிகா கால்பந்து போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த லியோனல் மெஸ்ஸி.
Updated on
1 min read

லியோனல் மெஸ்ஸியின் ஹாட்ரிக் கோலால் ஸ்பெயின் லா லிகா கால்பந்து சாம்பியன் பட்டத்தை பார்சிலோனா அணி தட்டிச் சென்றது.
ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கிளப்புகளுக்கு இடையே ஆன கால்பந்து சாம்பியன் போட்டி லா லிகா என அழைக்கப்படுகிறது. நிகழாண்டுக்கான இறுதிப் போட்டியில் பிரபல கால்பந்து கிளப்பான பார்சிலோனாவும்-டெபோர்டிவா லா குரோனா அணியும் மோதின. இதில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்து தனது அணி 25-வது பட்டத்தை வெல்ல உதவினார். 
இறுதியில் பார்சிலோனா அணி 4-2 என்ற கோல் கணக்கில் டெபோர்டிவா அணியை வீழ்த்தியது.
இதன் மூலம் ரியல் மாட்ரிட் அணி வசம் இருந்த பட்டத்தை பார்சிலோனா அணி கைப்பற்றியுள்ளது. 
இந்த வெற்றியின் மூலம் இதுவரை பார்சிலோனா இந்த சீசனில் தோல்வியே தழுவாத அணியாக திகழ்கிறது.
பார்சிலோனா அணியின் கேப்டன் இனியஸ்டா இந்த சீசனோடு தனது 22 ஆண்டுக்கால தொடர்பை முடித்துக் கொண்டு விடை பெறுகிறார். அவருக்கு போட்டியின் முடிவில் பிரியாவிடை அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com