இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் கடந்த புதன்கிழமை எட்ஜ்பாஸ்டனில் தொடங்கியது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 89.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன்கள் எடுத்தனர். அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 80 ரன்களும், பரிஸ்டோ 70 ரன்களும், ஜென்னிங்ஸ் 42 ரன்களும் எடுத்தனர்.
இரண்டாவது நாள் இன்று இந்திய அணி பேட்டிங் செய்யதது. இதில் 76 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ரன்களை இந்திய அணி எடுத்துள்ளது. அணியின்
தொடக்க வீரர்களாக முரளி விஜய் 20, ஷிகர் தவன் 26 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின் ராகுல் 4, விராட் கோலி 149 ரன்களையும் ,ரஹானே 15, ஹார்திக் பாண்டியா 22, அஸ்வின் 10, சாமி 2, சர்மா 5 ரன்கள் என எடுத்தனர். இதனால் முதன் இன்னிங்ஸ் முடிவில் இங்கிலாந்து அணி 13 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









