சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

முதல் டெஸ்ட்: ஒரே நாளில் 2014 பங்களிப்பைத் தாண்டிய அஸ்வின்

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் அஸ்வின்: 3 விக்கெட்டுகள் ( 2 டெஸ்டுகள்)...

News image
Updated On :2 ஆகஸ்ட் 2018, 4:39 am

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 88 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்துள்ளது.  அதிகபட்சமாக ஜோ ரூட் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்திருந்தார். சாம் கரன் 24 ரன்களுடனும், ஜேம்ஸ் ஆன்டர்சன் ரன்கள் இன்றியும் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசி அஸ்வின் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். 

நேற்றைய ஆட்டத்தின் புள்ளிவிவரங்கள்:

* டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவாக 6,000 ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஜோ ரூட். இதற்கு முன்பு அலாஸ்டர் குக், 5 வருடம், 231 நாள்களில் இதை எட்டினார். இந்நிலையில் ரூட், 5 வருடம் 342 நாள்களில் இந்த இலக்கை எட்டியுள்ளார். 

* இங்கிலாந்தில் முதல் நாளன்று இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சு

1932: 259/10 - லார்ட்ஸ்
2018: 285/9 - எக்பாஸ்டன்
1971: 252/8 - லார்ட்ஸ்

2014 இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் அஸ்வின்: 3 விக்கெட்டுகள் ( 2 டெஸ்டுகள்)
2018 இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தின் முதல் நாளில் அஸ்வின்: 4 விக்கெட்டுகள் ( முதல் டெஸ்டின் முதல் நாள்)

அஸ்வின் பந்துவீச்சில் அதிகமுறை ஆட்டமிழந்த வீரர்கள்

டேவிட் வார்னர் - 9
அலாஸ்டர் குக் - 8
எட் கோவன் - 7

எக்பாஸ்டனில் இந்திய வீரர்களின் சிறந்த பந்துவீச்சு

6/58 சேதன் சர்மா - 1986
5/146 கபில் தேவ் - 1979
4-60 எரப்பள்ளி பிரசன்னா - 1967
4-60* அஸ்வின் - 2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.