ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மீண்டும் வருவேன்: அறுவை சிகிச்சைக்குப் பிறகு விக்கெட் கீப்பர் சாஹா நம்பிக்கை!

ரித்திமன் சாஹாவுக்குத் தோள்பட்டைக் காயத்துக்கான அறுவை சிகிச்சை இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நேற்று மேற்கொள்ளப்பட்டது. ..

News image
Updated On :2 ஆகஸ்ட் 2018, 8:36 am

எழில்

இந்திய கிரிக்கெட் வீரர் ரித்திமன் சாஹாவுக்குத் தோள்பட்டைக் காயத்துக்கான அறுவை சிகிச்சை இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நேற்று மேற்கொள்ளப்பட்டது. 

 33 வயதான மேற்குவங்க விக்கெட் கீப்பரான சாஹாவுக்குத் தோளில் காயம் ஏற்பட்டது. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகும் நிலைமை மோசமடைந்தது. இதனால் அவரால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பங்கேற்க முடியவில்லை.

இந்நிலையில் தன்னுடைய தோள்பட்டைக் காயத்துக்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாக சாஹா பதிவு எழுதியுள்ளார். மேலும் தன்னுடைய புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். மருத்துவ உதவி வசதி ஏற்படுத்திக்கொடுத்த பிசிசிஐக்கு நன்றி. விரைவில் ஆடுகளத்துக்குத் திரும்புவேன் என்றும் அவர் எழுதியுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.